தந்தை இறந்த நேரத்திலும்...இசையமைப்பாளரின் நெகிழ்ச்சி செயல் குறித்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்

leone james

டிராகன் படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்-ன் தந்தை காலமானார். 

ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரைஸ் ஆப் தி டிராகன்' மற்றும் 'வழித்துணையே' பாடல்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,
இப்படத்தில் சிம்பு பாடிய 'ஏன்டி விட்டு போன?' பாடலை படக்குழு இன்று மாலை வெளியிட்டது.  

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்-ன் தந்தை நேற்று அதிகாலை உயிரிழந்ததாக  இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  பாடலின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை லியோனின் தந்தை காலமானார்.


அதன் காரணமாக பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கலாமா என்று நான் லியோனிடம்  
 கேட்டேன், ஆனால் அவர் இல்லை மச்சா, நாம் உறுதியளித்த ‘நேரத்தில்’  பாடலை வெளியிடுவோம் என கூறினார். இது எங்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அவர் தனது அறையில் பாடல் பணிகளை மேற்கொண்டபடியே ஹாலில் தனது தந்தையின் இறுதி பணிகளை பார்த்துக்கொண்டார். இதனை நான் தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லவில்லை, இதுவே லியோன் ஜேம்ஸ், ரசிகர்கள் மற்றும் சினிமாவை விரும்பும் பொது பார்வையாளர்களுக்கு காட்டும் மரியாதை என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.   'ஏன்டி விட்டு போன? பாடல்  லியோனின் தந்தைக்கு  சமர்ப்பணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


 

  

Share this story