காதலருடன் ‘ராக்கி’ படம் பார்த்த நயன்தாரா.. வைரல் புகைப்படங்கள் !

‘ராக்கி’ படத்தை திரையரங்கு ஒன்றிற்கு சென்று விக்னேஷ் மற்றும் நயன்தாரா இணைந்து படம் பார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ராக்கி’. ‘தரமணி’ படத்தின் படத்தின் மூலம் ஹீரோவாக பிரபலமான வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் வில்லனாக இயக்குனர் பாரதிராஜா நடித்து கலக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ரவீனா ரவி, ரோகிணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் இரு கேங்ஸ்டர் குழுக்களுக்களுக்கான மோதலை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. வழக்கமான கேங்ஸ்டர் கதையாக இல்லாமல் வித்தியாசமான இயக்கியுள்ளார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். ரத்தம் சொட்ட சொட்ட உருவாகியுள்ள இப்படத்தில் வசந்த் ரவி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோன்று பாரதிராஜா வில்லனாக மிரட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளது. ரசிகர்களும், பிரபலங்களும் இப்படத்தை பார்த்து நல்ல விமர்சனங்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்களான விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஒன்றாக இணைந்து சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் படம் பார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.