சம்பளமே வாங்காமல் அயலான் படத்தை முடித்துக் கொடுத்த சிவகார்த்திகேயன்.. முதல் பேட்டி வைரல்...

டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தை ‘நேற்று, இன்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி வருகிறார். சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகவுள்ள இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அனிமோஷன் பணிகள் அதிகமாக இருப்பதால் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிரித்திருந்த நிலையில், தற்போது பொங்கல் பண்டிகைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயலான் திரைப்படத்தில் சம்பளமே வாங்காமல் சிவகார்த்திகேயன் நடித்து கொடுத்ததாக நேர்காணல் ஒன்றில் கூறி இருக்கிறார். படம் வெளியாவதில் பெரும் சிக்கல் எழுந்த நிலையில், சம்பள பணத்தை வாங்க வில்லை எனவும், படம் வெளியாவது தான் முக்கியம் என சிவகார்த்திகேயன் தெரிவித்து உள்ளார். அத்துடன் அஜித் அழைத்தால் கண்டிப்பாக உலக சுற்றுலா செல்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
"#AjithKumar sir asked me that if I go for a bike ride😀❣️. I wish to go for a bike ride with him afte proper learning like him🏍️"
— AmuthaBharathi (@CinemaWithAB) December 26, 2023
- #Sivakarthikeyanpic.twitter.com/kRzdchxNcp
அயலான் படத்திற்காக சிவா கொடுத்த முதல் பேட்டி இதுவாகும். இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. மேலும், படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் உள்ள சொகுசு விடுதியில் தொடங்கி நடைபெறுகிறது.
#Sivakarthikeyan started giving #Ayalaan promotional interviews to YouTube 👌💥pic.twitter.com/hHRpwTylqz
— Movie Tamil (@MovieTamil4) December 26, 2023