தமிழில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் கன்னட படம்!

தமிழில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் கன்னட படம்!

கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘தியா’ படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.

இந்தாண்டு பிப்ரவரி மாதம் கே.எஸ்.அசோகா இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான ‘தியா’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இளைஞர்கள் மத்தியில் இந்தப் படம் கொண்டாடப்பட்டது. கன்னடம் மட்டும்மில்லாமல் இந்தியாவின் அனைத்து மொழி ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது. அதையடுத்து தியா படத்தின் ரீமேக் உரிமைகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

A look at K.S. Ashoka's 'Dia', the most interesting Kannada film of 2020 -  The Hindu

தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமெக்கை இயக்குனர் மனோஜ் லியோனல் ஜாஸன் இயக்க உள்ளார். இவர் கலையரசன் மற்றும் அஞ்சலி பாட்டில் நடிப்பில் குதிரைவால் படத்தை இயக்கியுள்ளார்.

குதிரைவால் hashtag on Twitter

தியா படம் நாம் பல முறை பார்த்த அதே காதல் கதை தான். முதலில் ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ். அப்புறம் ஹீரோ இறந்துவிடுவார். காதல் தோல்வியால் ஹீரோயின் துவண்டு வாழ்க்கையை வெறுத்து வாழும் சூழலில் செகண்ட் ஹீரோ உள்ளே வந்து ஹீரோயினை தன் காதல் வலையில் விழச்செய்வார். மௌனராகம், ராஜா ராணி என சில படங்கள் இந்த கதைக்களத்தில் வந்துள்ளன. இருந்தாலும் தியா படத்தில் எதார்த்தமான நடிப்பு, காட்சிப்படுத்தப்பட்ட விதம் மூலம் இளைஞர்களை கவர்ந்து விட்டது.

‘தியா’ தமிழ் ரீமேக் தொடர்பான முழு விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story