“சூர்யா44” படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!!

1

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்ராஜ். தொட்டதெல்லாம் தொழங்கும் என்ற பழமொழிக்கேற்ப இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டு தான் .

 

இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா 2 திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சூப்பர்டூப்பர் ஹிட் அடித்தது

இதையடுத்து தற்போது நடிகர் சூர்யாவின் 44ஆவது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் Love Laughter War என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த நேரத்தில் தற்போது இப்படத்தின் லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சூர்யாவின் பிறந்த நாள் இம்மாதம் வெளியாக உள்ளதால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக திரைத்துறையில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share this story