இன்று மாலை அதிரடியாக வெளியாகும் 'மாமன்னன்' டிரெய்லர்... மிரட்டலான போஸ்டர் வெளியீடு !

maamannan

உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தின் மிரட்டலான  போஸ்டர் வெளியாகியுள்ளது. 

 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. அரசியல் மற்றும் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

maamannan

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தை அந்நிறுவனமே வெளியிடவும் உள்ளது. இறுதிக்கட்ட பணியில் உள்ள இந்த படம் வரும் ஜூலை 19-ஆம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது.  

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த போஸ்டரில் உதயநிதி மற்றும் வடிவேலு ஆகிய இருவரின் உருவமும் பாதிபாதி உள்ளது. வித்தியாசமான இந்த போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

Share this story