அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அஜித் பிறந்தநாளில் வலிமை அப்டேட் வரப்போகுது!

அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அஜித் பிறந்தநாளில் வலிமை அப்டேட் வரப்போகுது!

நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் அன்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து எச் வினோத்- அஜித் மற்றும் போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தில் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அஜித் பிறந்தநாளில் வலிமை அப்டேட் வரப்போகுது!

வலிமை படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே அஜித் ரசிகர்கள் படம் குறித்த அப்டேட் கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எங்கு வலிமை அப்டேட் தான். அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் கூட வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர்.

தற்போது அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி வலிமை படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள பதிவில் “அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி முதல் பர்ஸ்ட் லுக் மற்றும் வலிமை படத்தின் ப்ரோமோஷன் குறித்த பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Share this story