பிக்பாஸ் முகேன் படத்துல சூரிக்கு என்ன கேரக்டர் ?… ‘வேலன்’ புதிய போஸ்டர் வெளியீடு!

பிக்பாஸ் முகேன் படத்துல சூரிக்கு என்ன கேரக்டர் ?… ‘வேலன்’ புதிய போஸ்டர் வெளியீடு!

‘வேலன்’ படத்தில் நடிகர் சூரி நடிக்கும் கேரக்டர் குறித்த போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா படங்களில் நடிப்பதில் பிசியாக உள்ளார் நடிகர் முகேன் ராவ். தனது முதல் படமான ‘வெற்றி’ படத்தின் முழு ஷூட்டிங்கையும் வேகமாக நடித்து முடித்துள்ளார். ‘வெப்பம்’ படத்தின் இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் முகேன் படத்துல சூரிக்கு என்ன கேரக்டர் ?… ‘வேலன்’ புதிய போஸ்டர் வெளியீடு!

இந்த படத்தின் அடுத்து தனது இரண்டாவது படமான ‘‘வேலன்’ படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் முகேன். கவின் மூர்த்தி இயக்கி வரும் இப்படத்தின் ஷூட்டிங் கொரானா காரணமாக தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது . முகேனுக்கு ஜோடியாக ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்த மீனாட்சி கோவிந்தராஜன் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

பிக்பாஸ் முகேன் படத்துல சூரிக்கு என்ன கேரக்டர் ?… ‘வேலன்’ புதிய போஸ்டர் வெளியீடு!

கோபி சுந்தர் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்கைன் மேன் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து ‘தில்லையார் பழனிசாமி’ என்ற கேரக்டரில் நடிகர் பிரபு நடிக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சூரி இந்த படத்தில் நடிக்கும் கேரக்டர் குறித்த புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சூரி கோயம்புத்தூரிலிருந்து ‘மமுக்கா தினேசன்’ என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அடுத்தடுத்து வெளியாகியுள்ள போஸ்டர்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Share this story