“சாதிய வர்க்கத்துக்கு எதிராக சண்டை செய்தவர் விஜயகாந்த்” - நேரில் அஞ்சலி செலுத்திய பா.ரஞ்சித்

“சாதிய வர்க்கத்துக்கு எதிராக சண்டை செய்தவர் விஜயகாந்த்” - நேரில் அஞ்சலி செலுத்திய பா.ரஞ்சித் 

கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது. தொடர்ந்து வெற்றிகொடி நாட்டிய அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் வாழ்விலிருந்து விலகினார். இருந்தும் அறிக்கை வாயிலாக அரசியல் செய்தார். இந்த நிலையில் சமீபகாலமாக உடல்நிலை மிகவும் மோசமாகவே தொடர் சிகிச்சையில் இருந்து வந்த விஜயகாந்த் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  காலமானார். அவரது இறப்பு செய்தி பலரையும் அதிரவித்துள்ளது. தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் இரங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

விஜயகாந்த் உடலுக்கு இயக்குநர் பா ரஞ்சித் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியது, ஊரில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் நான் உறுப்பினராக இருந்தவன். அவர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நடித்த திரைப்படங்களில் மக்களுககு ஆதரவாக நிற்கும் கதாபாத்திரங்களில்தான் அதிகம் நடித்துள்ளார். என்னுடைய இளம் வயது காலங்களை நினைத்து பார்த்தால், நான் விஜயகாந்த் ரசிகனாகத்தான் இருந்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Share this story