நடிகைகளுக்கே ஃடப் கொடுக்கும் அழகில் மனம் மயக்கும் விஜே அஞ்சனா!
விஜே அஞ்சனாவின் லேட்டஸ்ட் கான்செப்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக தன் கெரியரைத் தொடங்கினார் அஞ்சனா. பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கிய அஞ்சனா, தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
2008 ஆம் ஆண்டில் அஞ்சனா “மிஸ் சின்னத்திரை” விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த போதிலும், நடிப்பின் மீது ஆர்வமில்லை என அந்த வாய்ப்புகளை அஞ்சனா நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் கயல் படத்தின் கதாநாயகனாக நடித்த சந்திரனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் விஜே வாழ்க்கையில் இருந்து பிரேக் எடுத்த அஞ்சனா குழந்தை பிறந்த பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.
விஜேவாக இருந்தாலும் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவார் அஞ்சனா. தற்போது அஞ்சனா கையில் ரேடியோ பெட்டியுடன் நடத்தியுள்ள கான்செப்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஞ்சானா வரும் நாட்களில் சினிமா பக்கமும் களமிறங்குவார் என்று எதிர்பார்ப்போம்!
0