‘ராதே ஷ்யாம்’ படத்தில் இணைந்த மதன் கார்க்கி!

‘ராதே ஷ்யாம்’ படத்தில் இணைந்த மதன் கார்க்கி!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்திற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி பாடல் வரிகள் மற்றும் வசனம் எழுத்தவுள்ளார்.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் ராதே ஷ்யாம் படம் உருவாகி வருகிறது. ஐரோப்பாவில் நடக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. ஜஸ்டின் பிரபாகரன் தென்னிந்திய மொழிகளுக்கும் மிதூன் மற்றும் மனன் பரத்வாஜ் இருவர் இந்தி மொழிக்கும் இசையமைக்கின்றனர்.

‘ராதே ஷ்யாம்’ படத்தில் இணைந்த மதன் கார்க்கி!

தற்போது இந்தப் படத்திற்கு பாடல் வரிகள் மற்றும் வசனங்கள் எழுத மதன் கார்க்கி இணைந்துள்ளார். இதை மதன் கார்க்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உருத்திப்படுத்தியுள்ளார். அற்புதமான காதல் கதையான ராதே ஷ்யாம் படத்திற்கு பாடல்கள் மற்றும் வசனம் எழுத இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனும் அவரை வரவேற்றுப் பதிவிட்டுள்ளார்.

காதலர் தினத்தை முன்னிட்டு ராதே ஷ்யாம் படத்தின் டீசர் வெளியானது. டீசருக்கு மக்கள் மத்தயில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை வெளியான காதல் படங்களின் வரிசையில் மிகச்சிறந்த படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராதே ஷ்யாம்‘ படம் ஜூலை 30-ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story