‘விஸ்வாசம்’ படத்தின் ரெக்கார்டை முறியடித்ததா ‘மாஸ்டர்’!?

‘விஸ்வாசம்’ படத்தின் ரெக்கார்டை முறியடித்ததா ‘மாஸ்டர்’!?

கோலிவுட் சினிமாவைப் பொறுத்தவரை அஜித்தா? விஜய்யா? என்ற ரசிகர்களின் போட்டி என்றுமே முடிவுக்கு வரவப்போவதில்லை. யார் முன்னிலையில் இருக்கிறார் என்பதை நிலை நாட்ட நடந்து வரும் போட்டிகள் தற்போது மிகக் கடுமையாக மாற ஆரம்பித்துள்ளன. படங்களின் வசூல், ட்ரைலர் டீசர் மற்றும் பாடல்களும் எவ்வளவு வியூஸ் மற்றும் பார்வைகளை வைத்து போட்டி போட்டு வருகின்றனர். அதில் தற்போது டிஆர்பி என்ற விஷயமும் சேர்ந்துள்ளது.

‘விஸ்வாசம்’ படத்தின் ரெக்கார்டை முறியடித்ததா ‘மாஸ்டர்’!?

கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பானது. முதன்முறையாக மாஸ்டர் திரைப்படம் டிவியில் ஒளிபரப்பாவதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது கடந்த வாரத்தின் டிஆர்பி ரேட்டிங் பட்டியல் வெளியாகியுள்ளது.

‘விஸ்வாசம்’ படத்தின் ரெக்கார்டை முறியடித்ததா ‘மாஸ்டர்’!?

மாஸ்டர் திரைப்படம் 1 கோடியே 37 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. தற்போது மாஸ்டர், அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ரெக்கார்டை முறியடித்ததா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆம், விஸ்வாசம் திரைப்படம் சன் டிவியில் வெளியான போது 1 கோடியே 81 லட்சம் பார்வைகளைப் பெற்றிருந்தது. எனவே டிஆர்பி ரேஸில் விஸ்வாசம் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

‘விஸ்வாசம்’ படத்தின் ரெக்கார்டை முறியடித்ததா ‘மாஸ்டர்’!?
‘விஸ்வாசம்’ படத்தின் ரெக்கார்டை முறியடித்ததா ‘மாஸ்டர்’!?

Share this story