இரண்டு பாகங்களாக வெளியாகும் மணி ஹெய்ஸ்ட் 5-வது சீசன்… டீஸருடன் ரிலீஸ் தேதி வெளியானது!

இரண்டு பாகங்களாக வெளியாகும் மணி ஹெய்ஸ்ட் 5-வது சீசன்… டீஸருடன் ரிலீஸ் தேதி வெளியானது!

மணி ஹெய்ஸ்ட் (Money Heist) வெப் சீரிஸின் ஐந்தாவது சீசன் இரண்டு பாகங்கள் ஆக வெளியாக இருப்பதாகவும் அதன் ரிலீஸ் தேதிகளும் புதிய டீசர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணி ஹெய்ஸ்ட் உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு வெப் சீரிஸ். ஆங்கிலம் அல்லாத ஒரு வெப் சீரிஸின் பிரம்மாண்ட வெற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெப் சீரிஸின் ஒவ்வொரு எபிசோடும் சீட் நுனியில் உக்கார வைக்கும் பல திருப்புமுனைகளைக் கொண்டிருக்கும்.

இரண்டு பாகங்களாக வெளியாகும் மணி ஹெய்ஸ்ட் 5-வது சீசன்… டீஸருடன் ரிலீஸ் தேதி வெளியானது!

இந்த வெப் சீரிஸில் இதுவரை நான்கு சீசன்கள் வெளியாகியுள்ளது. அடுத்து மணி ஹெய்ஸ்ட் ரசிகர்கள் சீசன் 5-க்கு வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

தற்போது மணி ஹெய்ஸ்ட் 5-வது சீஸனின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் முழுவதும் விறுவிறுப்பான காட்சிகளால் நிரம்பியுள்ளது. மேலும் 5-வது சீசன் இரண்டு பாகங்கள் ஆக வெளியாக இருப்பதாகவும் அதன் ரிலீஸ் தேதிகளும் புதிய டீசர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பாகங்களாக வெளியாகும் மணி ஹெய்ஸ்ட் 5-வது சீசன்… டீஸருடன் ரிலீஸ் தேதி வெளியானது!

முதல் பாகம் செப்டம்பர் மாதம் 3-ம் தேதியும், இரண்டாம் பாகம் டிசம்பர் 3-ம் தேதியும் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மணி ஹெய்ஸ்ட் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

Share this story