பிரபாஸின் காதல் காவியம் ‘ராதே ஷ்யாம்’ டீசர் வெளியானது!

பிரபாஸின் காதல் காவியம் ‘ராதே ஷ்யாம்’ டீசர் வெளியானது!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் காதல் காவியம் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீசர் காதலர் தினமான இன்று வெளியாகியுள்ளது.

பிரபாஸ் நடித்து வரும் இந்திய அளவு பிரம்மாண்ட படங்களில் ராதே ஷ்யாம் திரைப்படமும் ஒன்று. இந்தப் படத்திற்கு இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பிரபாஸின் காதல் காவியம் ‘ராதே ஷ்யாம்’ டீசர் வெளியானது!

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் தென்னிந்திய மொழிகளுக்கும் மிதூன் மற்றும் மனன் பரத்வாஜ் இருவர் இந்தி மொழிக்கும் இசையமைக்கின்றனர். ஐரோப்பாவில் நடக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.

காதல் காவியமாக உருவாகி வரும் இப்படத்தின் டீசர் காதலர் தினமான இன்று வெளியாகியுள்ளது. டீசரில் கூட்டத்தில் முன்னோக்கி செல்லும் பூஜாவை இத்தாலி மொழியில் “நீ ஒரு தேவதை… உன்னைப் பாக்க நான் சாகணுமா?” என்று கேட்கிறார். உடனே அங்கிருக்கும் அனைவரும் ஆச்சர்யமாக அவரைப் பார்க்கின்றனர். படம் நிச்சயமாக இதுவரை வெளியான காதல் படங்களின் வரிசையில் மிகச்சிறந்த படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராதே ஷ்யாம்‘ படம் ஜூலை 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story