ஓடிடி வெளியீட்டு விவகாரம்… தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையே வலுக்கும் மோதல்!

ஓடிடி வெளியீட்டு விவகாரம்… தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையே வலுக்கும் மோதல்!

தியேட்டர் உரிமையாளர்கள் ஓடிடி வெளியீடு குறித்து உறுதிக் கடிதம் கேட்டால் கொடுக்கவேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வலுயுறுத்தியுள்ளனர்.

விஜய் நடிப்பில் லோகேஷ் வெளியான மாஸ்டர் தியேட்டரில் வெளியான சில நாட்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியானது. இது தியேட்டர் உரிமையாள ர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதையடுத்து தியேட்டரில் வெளியாகும் படங்களில் சிறிய படங்கள் 30 நாட்கள் மற்றும் பெரிய படங்கள் 50 நாட்கள் கழித்து தான் டிஜிட்டல் தளங்களில் படத்தை வெளியிடுவோம் என்று உறுதிமொழிக் கடிதம் கொடுக்க வேண்டுமென்றும் அப்படிக் கடிதம் கொடுக்கும் படங்கள் தான் தியேட்டரில் திரையிடப்படும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் நிபந்தனை வைக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் பல படங்கள் தியேட்டரே வேணாம் என முடிவு செய்து டிஜிட்டல் தளங்களை நோக்கிச் செல்கின்றனர். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஓடிடி வெளியீட்டு விவகாரம்… தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையே வலுக்கும் மோதல்!

அறிக்கை பின்வருமாறு:

“தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து கடந்த 17.2.2021 அன்று நடத்திய கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்.

இனி வரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களை வெளியிடும்போது எந்த ஒரு கடிதமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் , விநியோகஸ்தர்களிடமும் கொடுக்க வேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் வரையில், இது சம்பந்தமாக கடிதம் கேட்டால் உடனடியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை தொடர்பு கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story