கமல்ஹாசனுக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்!?

கமல்ஹாசனுக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்!?

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சினிமாவில் முந்தைய நாட்களில் வில்லனுக்கென்று மிரட்டும் தோன்றவர்கள் மட்டுமே நடித்து வருவார்கள். வரும் அனைத்து படங்களிலும் அந்தக் குறிப்பிட்ட சிலரே வில்லனாக நடித்து வந்தனர். காலப்போக்கில் அந்த கிளிஷே உடைக்கப்பட்டு ஹீரோக்களையும் வில்லனாக நடிக்க வைத்தனர். தனி ஒருவன் படத்தையே இதற்கு சான்றாய் கூறலாம்.

சினிமா வாய்ப்பிழந்த சில நடிகர்களுக்கு வில்லன் கதாபாத்திரங்கள் மறுவாழ்வு கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். அந்த வகையில் மற்றுமொரு ஹீரோ வில்லனாக மாற இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கமல்ஹாசனுக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்!?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் ராகவா லாரன்ஸை வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் தேர்தலுக்குப் பின்னர் பட வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

விக்ரம் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டெர்னஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

Share this story