நானி, ரஷ்மிகா மந்தான்னா கூட்டணியில் உருவாகும் வரலாற்றுப் படம்!

நடிகர் நானி மற்றும் ரஷ்மிகா மந்தான்னா கூட்டணி புதிய வரலாற்றுப் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேச்சுரல் ஸ்டார் நானி கடைசியாக மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி ’இயக்கத்தில் ‘வி’ என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. ஊரடங்கை அடுத்து தற்போது நானி அக்டோபர் முதல் இடைவெளி இல்லாமல் நடிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

நானி, ரஷ்மிகா மந்தான்னா கூட்டணியில் உருவாகும் வரலாற்றுப் படம்!

டாக்ஸிவாலா படத்தின் இயக்குனர் ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில் நானி வரலாற்றுப் படம் ஒன்றில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார். இது நானியின் படங்களில் மிக அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ரஷ்மிகா மந்தான்னாவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. நானி மற்றும் ரஷ்மிகா இருவரும் 2108-ம் ஆண்டு வெளியான ‘தேவதாஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளனர்.

நானி, ரஷ்மிகா மந்தான்னா கூட்டணியில் உருவாகும் வரலாற்றுப் படம்!

இப்படத்தில் ஏற்கனவே சாய் பல்லவி நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் மற்றொரு நடிகைக்கான தேர்வு நடந்து வருகிறது. ரஷ்மிகா மந்தான்னாவை இந்தப் படத்தில் நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகின்றனராம். அவர் சம்மதித்துவிட்டால் இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ரஷ்மிகா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ரஷ்மிகா கார்த்தி உடன் ‘சுல்தான்’ மற்றும் அல்லு அர்ஜூனுடன் ‘புஷ்பா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Share this story