குதூகலமான காமெடிக்குத் தயாராகுங்க… ‘டிக்கிலோனா’ படத்தின் புதிய அப்டேட்!

குதூகலமான காமெடிக்குத் தயாராகுங்க… ‘டிக்கிலோனா’ படத்தின் புதிய அப்டேட்!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா திரைப்படத்திற்கு தணிக்கையில் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

குதூகலமான காமெடிக்குத் தயாராகுங்க… ‘டிக்கிலோனா’ படத்தின் புதிய அப்டேட்!

யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, நிழல்கள் ரவி, உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். நடித்திருக்கிறார்கள். 

தற்போது இந்தப் படத்திற்கு தணிக்கைச் சோதனையில் ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குதூகலப்படுத்தத் தயாராகிவிட்டது. இது குறித்து பதிவிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் “யூ சான்றிதழ் கிடைத்துள்ளது யுவர் ஹானர். காமெடியான, குதூகலமான படத்திற்குத் தயராகுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

சந்தானம் நடிப்பில் வெளியாகி வரும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே இந்தப் படத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story