துல்கர் சல்மான் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்!

துல்கர் சல்மான் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்!

துல்கர் சல்மான் புதிதாக நடிக்கும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் துல்கர் அரவிந்த் கருணாகரன் என்ற உதவி காவல் ஆய்வாளராக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘சல்யூட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை டயானா பெண்டி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

துல்கர் சல்மான் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்!

தற்போது இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மான் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது இதுவே முதல் முறை. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் துல்கர் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக காணப்படுகிறார்.

துல்கர் சல்மான் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்!

இந்தப் படத்தை துல்கர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ர் வேஃபெரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கிறார்.
தற்போது திருவனந்தபுரத்தில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Share this story