விவேக் நடித்த காட்சிகளை மீண்டும் படப்பிடிப்பு செய்யும் ஷங்கர்!?

விவேக் நடித்த காட்சிகளை மீண்டும் படப்பிடிப்பு செய்யும் ஷங்கர்!?

இந்தியன் 2 படத்தில் விவேக் இடம் பெற்றுள்ள காட்சிகளை ஷங்கர் மீண்டும் படப்பிடிப்பு செய்ய வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷங்கர் அப்படத்திலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

விவேக் நடித்த காட்சிகளை மீண்டும் படப்பிடிப்பு செய்யும் ஷங்கர்!?

நடிகர் விவேக், கமல்ஹாசன் உடன் நடிப்பது தன்னுடைய நீண்ட நாள் விருப்பம் என்று தெரிவித்திருந்தார். அது இந்தியன் 2 படத்தின் மூலம் நிறைவேறியது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்தப் படம் முடியும் முன்னரே விண்ணுலகம் சென்றுவிட்டார்.

தற்போது ‘இந்தியன் 2’ படத்தின் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பொழுது, இயக்குனரும் தயாரிப்பாளரும் சுமூக பேசி முடிவெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

விவேக் நடித்த காட்சிகளை மீண்டும் படப்பிடிப்பு செய்யும் ஷங்கர்!?

ஜூலை முதல் அக்டோபர் வரை நேரம் கிடைக்கும் என்பதால் இந்தியன்-2 படத்தை முடித்துக்கொடுக்க முயற்சிக்கிறேன் என்று இயக்குநர் ஷங்கர் பதில் அளித்துள்ளார்.

விவேக் இந்தியன் 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். எனவே ஷங்கர் இந்தியன் 2 படத்தைத் துவங்கினால், விவேக் நடித்த காட்சிகளை வேறொரு நடிகரை வைத்து மீண்டும் இயக்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Share this story