‘டாக்டர்’ படத்தில் ரிலீஸ் தள்ளி வைப்பு… இந்த தேதில தான் ரிலீஸ் பண்ணப் போறாங்களாம்!

‘டாக்டர்’ படத்தில் ரிலீஸ் தள்ளி வைப்பு… இந்த தேதில தான் ரிலீஸ் பண்ணப் போறாங்களாம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் நடித்துள்ளார். பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

‘டாக்டர்’ படத்தில் ரிலீஸ் தள்ளி வைப்பு… இந்த தேதில தான் ரிலீஸ் பண்ணப் போறாங்களாம்!

இந்தப் படத்தின் அனைத்து இறுதி கட்ட வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்திலிருந்து வெளியான அனைத்துப் பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தப் படத்திற்கு கோலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

டாக்டர் மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டாக்டர்’ படத்தில் ரிலீஸ் தள்ளி வைப்பு… இந்த தேதில தான் ரிலீஸ் பண்ணப் போறாங்களாம்!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த நேரத்தில் வெளியாகவிருந்த படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை மாற்றி வருகின்றனர்.

சசிகுமார் நடித்த எம்ஜிஆர் மகன் படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது டாக்டர் படத்தை மே 13-ம் தேதி ரம்சான் பண்டிகை அன்று வெளியிடத் திட்டமிட்டு வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this story