அமேசான் ப்ரைமில் வெளியாகும் ‘டெனட்’… நோலன் ரசிகர்கள் உற்சாகம்!

அமேசான் ப்ரைமில் வெளியாகும் ‘டெனட்’… நோலன் ரசிகர்கள் உற்சாகம்!

இன்று முதல் ‘டெனட்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் டெனெட் திரைப்படம் உருவாகியிருந்தது. இந்தப் படம் டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பட்டின்சன், மைக்கல் கெய்ன், டிம்பில் கபாடியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அமேசான் ப்ரைமில் வெளியாகும் ‘டெனட்’… நோலன் ரசிகர்கள் உற்சாகம்!

கிறிஸ்டோபர் நோலன் என்றாலே அந்தப் படத்திற்கு உலக அளவில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். டெனட் படத்திற்கும் அப்படிதான். லாக்டவுன் சமயத்தில் வெளியானாலும் படம் நல்ல வசூலைப் பெற்றது. இந்தியாவிலும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது.

Image

தற்போது டெனட் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெனட் திரைப்படம் மார்ச் 31-ம் தேதி, அதாவது இன்று முதல் அமேசான் ப்ரைம் இந்தியா தளத்தில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இதனால் நோலன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Share this story