வசந்தபாலன்- அர்ஜுன் தாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் பிரபல இந்தி படத்தின் ரீமேக்கா!?

வசந்தபாலன்- அர்ஜுன் தாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் பிரபல இந்தி படத்தின் ரீமேக்கா!?

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்து வரும் படம் இந்தி படத்தின் ரீமேக் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் வசந்தபாலன் தற்போது அல்லு அர்ஜுனை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்கள் நால்வருடன் இணைந்து ‘Urban Boyz‘ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார். அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக இப்படமா உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

வசந்தபாலன்- அர்ஜுன் தாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் பிரபல இந்தி படத்தின் ரீமேக்கா!?

சில தினங்களுக்கு முன்பு தான் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. எனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

வசந்தபாலன்- அர்ஜுன் தாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் பிரபல இந்தி படத்தின் ரீமேக்கா!?

இந்தப் படம் ஹிந்தியில் வெளியான ‘லிஃப்ட் பாய்‘ என்ற படத்தின் ரிமேக் தான் என்று தற்போது வரை கூறப்பட்டு வருகிறது. ஆனால் இயக்குனர் வசந்தபாலன் இதை மறுத்துள்ளார். வசந்தபாலன் படங்கள் என்றாலே மிகவும் அழுத்தமான திரைக்கதை இருக்கும். இந்தப் படமும் அவரின் படங்கள் வரிசையில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story