“விரைவில் உங்களை மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன்”… வடிவேலு அறிவிப்பு!

“விரைவில் உங்களை மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன்”… வடிவேலு அறிவிப்பு!

நடிகர்  வடிவேலு நேற்று (13-09-2020) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையடுத்து அவருக்கு ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் வாழ்த்து மழை பொழிந்தனர்.

Image

தனது ஈடு இணை இல்லா நடிப்பு மற்றும் முக பாவனையின் மூலம் பார்த்த உடனேயே சிரிக்க வைக்கும் சிறந்த கலைஞர் வடிவேலு. இவர் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, சிறந்த குணசித்திர நடிகரும் தான். தேவர்மகன் படத்தில் வடிவேலு நகைச்சுவை நடிகராக நடித்திருக்க மாட்டார். ஒரு குணசித்திர நடிகராகவே வலம் வருவார். சிவாஜி, கமல்ஹாசன் எனும் இரு பெரும் நடிப்பு ஆளுமைகளுக்கு மத்தியில் தன்னுடைய சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி அனைவரது மத்தியில் பாராட்டு பெற்றார். சோசியல் மீடியாக்களில் ‘மீம் காட்’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகிறார். சில காலமாக இவர் படங்களில் தோன்றாமல் இருந்தாலும் மீம்ஸ் மூலமாக தினமும் மக்களை மகிழ்விக்கும் கலைஞராய் வாழ்ந்து வருகிறார்.

வடிவேலு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “அன்போடு வாழ்த்திய நேசத்தின் நெஞ்சங்களுக்கு பாசத்தின் நன்றிகள். விரைவில் உங்களை மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story