மணிரத்னம் சொன்ன வார்த்தையால் கடுப்பான கேவி ஆனந்த்… ‘நவரசா’ படத்திலிருந்து விலகியதன் பின்னணி!
மணிரத்னம் கூறிய வார்த்தையால் இயக்குனர் கேவி ஆனந்த் கடும் அதிருப்தியில் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன.
இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் ஒன்பது இயக்குனர்கள், ஒன்பது கதைகள்,பல்வேறு நடிகர்களைக் கொண்ட ‘நவரசா‘ என்ற அந்தாலஜி திரைப்படம் உருவாகி வருகிறது.
முதலில் கே.வி. ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்பராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ஆர் ரதிந்திரன் பிரசாத், அரவிந்த் சுவாமி என மொத்தம் 9 இயக்குனர்கள் தான் இந்த அந்தாலஜியின் 9 பாகங்களை இயக்கவிருக்கும் 9 இயக்குனர்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படக்குழுவில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இயக்குனர் பொன்ராம் எடுத்த பகுதி சரியில்லை என்று நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் ஹலிதா ஷமீம் இணையும் முன்னரே விலகிவிட்டாராம்.
இயக்குனர் கேவி ஆனந்த் விலகியதாக சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தோம். மேலும் அவருக்குப் பதிலாக ஆசை, ரிதம் படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த் இணைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தோம். தற்போது கேவி ஆனந்த் இந்தப் படத்திலிருந்து விலகியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். அந்தப் பகுதியின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்த போது இயக்குனர் மணிரத்னம் இப்படம் பற்றி மோசமான பேசிவிட்டாராம். அதை அறிந்த கேவி ஆனந்த் கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தான் பாதியிலே அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் படக்குழுவினர் அவரை பல முறை அணுகியும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லையாம். எனவே அவர் இணைவாரா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!