சிவில் இன்ஜினியராக நடிக்கும் விஷ்ணு விஷால்… ‘மோகன்தாஸ்’ படத்தின் முக்கிய அப்டேட்!

சிவில் இன்ஜினியராக நடிக்கும் விஷ்ணு விஷால்… ‘மோகன்தாஸ்’ படத்தின் முக்கிய அப்டேட்!

விஷ்ணு விஷால் நடித்து வரும் மோகன்தாஸ் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் மோகன்தாஸ். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சிவில் இன்ஜினியராக நடிக்கும் விஷ்ணு விஷால்… ‘மோகன்தாஸ்’ படத்தின் முக்கிய அப்டேட்!

தற்போது விஷ்ணு விஷால் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தைப் பார்க்கும் போது இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் சிவில் இஞ்சினியராக நடித்து வருவதாகத் தெரிகிறது.

மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அன்பறிவ் சகோதர்கள் இந்தப் படத்திற்கு ஸ்டண்ட் வடிவமைப்பாளர்களான இணைந்துள்ளனர். நடிகை ரைசாவும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார். சைக்கோ திரில்லர் ஜேர்னரில் இந்தப் படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share this story