யோகிபாபுவின் ‘மண்டேலா’ பட ரிலீஸ் தேதி அப்டேட்… நேரடியாக விஜய் டிவியில் வெளியாகிறது!

யோகிபாபுவின் ‘மண்டேலா’ பட ரிலீஸ் தேதி அப்டேட்… நேரடியாக விஜய் டிவியில் வெளியாகிறது!

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள மண்டேலா திரைப்படம் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகிபாபுவின் ‘மண்டேலா’ பட ரிலீஸ் தேதி அப்டேட்… நேரடியாக விஜய் டிவியில் வெளியாகிறது!

மண்டேலா திரைப்படத்தை மடோன் அஸ்வின் என்பவர் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் மண்டேலா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் டூலெட் படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமாரும் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முடி திருத்துபவர்களின் வாழ்க்கைக் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

யோகிபாபுவின் ‘மண்டேலா’ பட ரிலீஸ் தேதி அப்டேட்… நேரடியாக விஜய் டிவியில் வெளியாகிறது!

இந்தப் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜோக்கர் படத்தைப் போல சமூக அவலங்களை காமெடி கலந்து தெரிவிக்கும் வகையில் இப்படம் உருவாகியிருப்பதாகத் தெரிகிறது.

மண்டேலா திரைப்படம் விஜய் டிவியில் நேரடியாக ஏப்ரல் 4-ம் தேதி காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதையடுத்து நெட்பிளிக்ஸில் ஏப்ரல் 9-ம் தேதி முதல் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story