அஜீத் பிறந்தநாளுக்காக ‘தல 61’ படத்தை டிரெண்டாக்கும் ரசிகர்கள்…

அஜீத் பிறந்தநாளுக்காக ‘தல 61’ படத்தை டிரெண்டாக்கும் ரசிகர்கள்…

‘வலிமை’ படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில் ‘தல 61’ படத்தை சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர் அஜீத் ரசிகர்கள்.

அஜீத் பிறந்தநாளுக்காக ‘தல 61’ படத்தை டிரெண்டாக்கும் ரசிகர்கள்…

அஜீத் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தின் 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுவிட்டது. அஜீத்துக்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகர் கார்த்திகேயா வில்லனாக மிரட்டியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அஜீத் பிறந்தநாளுக்காக ‘தல 61’ படத்தை டிரெண்டாக்கும் ரசிகர்கள்…

இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருக்கும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர், மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளையொட்டி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரானா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டப்படி ‘வலிமை’ போஸ்டர் வெளியாகாது என அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அஜீத் பிறந்தநாளுக்காக ‘தல 61’ படத்தை டிரெண்டாக்கும் ரசிகர்கள்…

இதையடுத்து அஜீத் பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அவரை பற்றி ஏதாவது விஷயத்தை டுவிட்டரில் டிரெண்ட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர் ரசிகர்கள். இவ்வளவு நாட்களாக ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்ட நிலையில் தற்போது, அஜீத் நடிக்கவிருக்கும் ‘தல 61′ என்ற அப்டேட்டை டிரெண்டிங்கில் விட்டுள்ளனர். ‘வலிமை’ படத்திற்கு பிறகு எச்.வினோத் தான் மூன்றாவது முறையாக அஜித்தை இயக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த டிரெண்ட்டிங்கை ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

Share this story