மீண்டும் சிக்கலில் ‘டாக்டர்’. அதிருப்தியில் சிவகார்த்திகேயன்

மீண்டும் சிக்கலில் ‘டாக்டர்’. அதிருப்தியில் சிவகார்த்திகேயன்

‘டாக்டர்’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நடிகர் சிவகார்த்திகேயன் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, இளவரசு, விஜே அர்ச்சனா, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எஸ்.கே.பிரொக்ஷன் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

மீண்டும் சிக்கலில் ‘டாக்டர்’. அதிருப்தியில் சிவகார்த்திகேயன்

கடந்த மார்ச் 26-ம் தேதி வெளியாக இருந்த இப்படம் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இதையடுத்து ரம்ஜான் தினத்தன்று ‘டாக்டர்’ வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதற்குள் கொரானா 2வது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தனர்.

மீண்டும் சிக்கலில் ‘டாக்டர்’. அதிருப்தியில் சிவகார்த்திகேயன்

முதலில் கொரானா தொற்று குறைந்து திரையரங்கில் ரிலீஸ் செய்யலாம் என படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கும் சிவகார்த்திகேயன் முடிவு செய்தார். ஆனால் மற்றொரு தயாரிப்பாளரோ ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்மிட்டிருந்தார். இதனால் இருவரிடையே மோதல் போக்கு இருந்து வந்தது. கொரானா நிலைமை பார்த்தால் இப்போதைக்கு திரையரங்கில் ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை என கருதிய சிவகார்த்திகேயன் வேறு வழியின்றி ஓடிடியில் ரிலீஸ் செய்ய ஒத்துக்கொண்டார்.

மீண்டும் சிக்கலில் ‘டாக்டர்’. அதிருப்தியில் சிவகார்த்திகேயன்

இதையடுத்து ஓடிடி நிறுவனம் ஒன்றிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் பெரிய தொகைக்கு வாங்கிக்கொள்ள ஒத்துக்கொண்டது. ஆனால் சேட்டிலைட் உரிமத்தையும் சேர்த்து தரவேண்டும் என கேட்டனராம். ஆனால் ஏற்கனவே சாட்டிலைட் உரிமம் சன் டிவிக்கு விற்கப்பட்டதால், அவர்களிடம் பேசி பார்த்தனர். ஆனால் சன் டிவி தரப்பு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

Share this story