உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம் தல… அஜித்தின் அறிக்கையை பேனராக அடித்த ரசிகர்கள்!

உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம் தல… அஜித்தின் அறிக்கையை பேனராக அடித்த ரசிகர்கள்!

நடிகர் அஜித் குமார் நேற்று முன்தினம்(பிப்ரவரி 15) வெளியிட்ட அறிக்கையை அடுத்து உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம் என்று அஜித் ரசிகர்கள் தெரிவித்து பேனர் அடித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

வலிமை படம் ஆரம்பித்திலிருந்தே அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பார்க்கும் இடமெல்லாம் வலிமை அப்டேட் என்று தெரியும் வண்ணம் சமூக வலைத்தளங்களை திணறடித்து வந்தனர் அஜித் ரசிகர்கள்.

முதல்வர், பிரதமர் பிரச்சாரத்திலும் கூட வலிமை அப்டேட் கேட்டனர். இந்த செயலால் அதிருப்தி அடைந்த அஜித் ரசிகர்களை கண்டித்து அறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டார்.

உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம் தல… அஜித்தின் அறிக்கையை பேனராக அடித்த ரசிகர்கள்!

“கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் “வலிமை” சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுறச் செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும்.

உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும். இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும் , சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்.” என்றவாறு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம் தல… அஜித்தின் அறிக்கையை பேனராக அடித்த ரசிகர்கள்!

இதையடுத்து மதுரை அஜித் ரசிகர்கள் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம் தல, உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்.” என்று வாசங்கங்களுடன் அஜித்தின் அறிக்கையை பேனராகவும் அடித்துள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this story