மெகா சாதனை படைத்த ‘கே.ஜி.எப் 2’. குவியும் வாழ்த்துக்கள் !

மெகா சாதனை படைத்த ‘கே.ஜி.எப் 2’. குவியும் வாழ்த்துக்கள் !

‘கே.ஜி.எப்’ திரைப்படத்தின் டீசர் 185 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மெகா சாதனை படைத்துள்ளது.

மெகா சாதனை படைத்த ‘கே.ஜி.எப் 2’. குவியும் வாழ்த்துக்கள் !

கே.ஜி.எப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். ‘கே.ஜி.எப்’ 2 பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்து மிரட்டியிருக்கிறார். இந்த படத்தில் சூரிய வர்மனின் தம்பியின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். ஆதிரா கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் களமிறங்கியுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெகா சாதனை படைத்த ‘கே.ஜி.எப் 2’. குவியும் வாழ்த்துக்கள் !

மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இதையடுத்து வரும் ஜூலை 16ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரானாவின் 2வது அலையின் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இந்த தேதியில் மாற்றம் வரலாம் என கூறப்படுகிறது.

மெகா சாதனை படைத்த ‘கே.ஜி.எப் 2’. குவியும் வாழ்த்துக்கள் !

கடந்த மாதம் ‘கேஜிஎப் 2’ டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ராக்கி பாய் மிரட்டலாக இருந்த டீசரால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் யூட்யூப்பில் வெளியான இந்த படத்தின் டீசர் 185 மில்லியன் பார்வைகளை கடந்து தற்போது சாதனை படைத்துள்ளது. விரைவில் இது 200 மில்லியன்களை கடந்துவிடும் என கூறப்படுகிறது. இதேபோன்று 8 மில்லியன் லைக்குகளை இந்த டீசர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story