×

‘கைதி’ இந்தி ரீமேக்கில் விஜய் பட நாயகி ?.. விரைவில் தொடங்கும் படத்தின் ஷூட்டிங் !

இந்தியில் உருவாகும் ‘கைதி’ படத்தின் ரீமேக்கில் தமிழின் முன்னணி நாயகி ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய ‘மாநகரம்’, கைதி, மாஸ்டர் உள்ளிட்டவை மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளன. தற்போது கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்க முதற்கட்ட பணிகளை செய்து வந்தார் லோகேஷ். சில மாதங்கள் முன்பே ஆரம்பிக்கப்பட வேண்டிய இப்படம் கமலின் அரசியல் பிரவேசத்தால் இன்றுவரை தொடங்கப்படால் இருக்கிறது. இதற்கிடையே நடிகர் கார்த்தியை
 

இந்தியில் உருவாகும் ‘கைதி’ படத்தின் ரீமேக்கில் தமிழின் முன்னணி நாயகி ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய ‘மாநகரம்’, கைதி, மாஸ்டர் உள்ளிட்டவை மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளன. தற்போது கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்க முதற்கட்ட பணிகளை செய்து வந்தார் லோகேஷ். சில மாதங்கள் முன்பே ஆரம்பிக்கப்பட வேண்டிய இப்படம் கமலின் அரசியல் பிரவேசத்தால் இன்றுவரை தொடங்கப்படால் இருக்கிறது.

இதற்கிடையே நடிகர் கார்த்தியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் ‘கைதி’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, முழுக்க முழுக்க ஆக்ஷ்ன் படமாக உருவாகியிருந்த இப்படத்தில் அச்சு அசலாக கைதியாக நடித்து அசத்தியிருந்தார் கார்த்தி.

தற்போது ‘கைதி’ திரைப்படம் இந்தி ரீமேக்காக உள்ளது என்பது தெரிந்த விஷயம். இந்த படத்தில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். இந்நிலையில் ‘கைதி’ இந்தி ரீமேக்கில் படத்தில் சில மாற்றங்களை செய்யவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தமிழில் ஹீரோயின் இல்லாத நிலையில் இந்தியில் ஒரு பிளாஷ்பேக் சீசனை வைத்து தேவ்கனுக்கு மனைவி கேரக்டர் ஒன்றை உருவாக்க லோகேஷ் முடிவு செய்திருக்கிறார். அந்த கேரக்டரில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. கொரானா தொற்று குறைந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.