×

மாஸ்டரோடு இணைந்த வலிமை… கொண்டாடும் இரு தரப்பு ரசிகர்கள்!

இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் எச் வினோத் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானதை அடுத்து ட்விட்டரில் ‘வலிமை’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய ஹாஷ்டாக்குகள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் எச் வினோத் இருவரும் தங்களது முதல் படத்திலிருந்து ஒன்றாக திரைத்துறையில் பயணிக்க ஆரம்பித்தவர்கள். கோலிவுட்டின் எதிர்காலமாக பார்க்கப்படும் இளம் இயக்குனர்கள். சிறிய படங்கள் மூலம் தங்களது திரைப்பயணத்தைத் துவங்கிய இருவரும் இன்று கோலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்களை இயக்கிவிட்டனர். இந்நிலையில் லோகேஷ்,
 

இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் எச் வினோத் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானதை அடுத்து ட்விட்டரில் ‘வலிமை’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய ஹாஷ்டாக்குகள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் எச் வினோத் இருவரும் தங்களது முதல் படத்திலிருந்து ஒன்றாக திரைத்துறையில் பயணிக்க ஆரம்பித்தவர்கள். கோலிவுட்டின் எதிர்காலமாக பார்க்கப்படும் இளம் இயக்குனர்கள். சிறிய படங்கள் மூலம் தங்களது திரைப்பயணத்தைத் துவங்கிய இருவரும் இன்று கோலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்களை இயக்கிவிட்டனர்.

இந்நிலையில் லோகேஷ், வினோத் இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரில் சந்தித்து நேரம் செலவிட்டுள்ளனர். அந்தப் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். “பல வருடங்களுக்குப் பிறகு வினோத் அண்ணாவுடன் சிறப்பாக ஒரு சந்திப்பு…சகோதரத்துவம்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இதையும் போட்டிபோட்டுக் கொண்டு ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர். #Valimai, #Master மற்றும் #Thalapathy65 ஆகிய ஹாஷ்டாக்குகளை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

எச் வினோத் அஜித் நடிப்பில் வலிமை படத்தை இயக்கி வருகிறார். மறுபுறம் லோகேஷ் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கவுள்ளார்.