நடிகை ஷில்பா ஷெட்டியைத் தவிர, குடும்பத்தினர் அனைவர்க்கும் கொரோனா!

நடிகை ஷில்பா ஷெட்டியைத் தவிர, குடும்பத்தினர் அனைவர்க்கும் கொரோனா!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியைத் தவிர அவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

“கடந்த 10 நாட்கள் குடும்பமாக எங்கள் அனைவருக்கு மிகவும் கடினமான காலமாக இருந்தது. என் பெற்றோர் மாமியார் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

நடிகை ஷில்பா ஷெட்டியைத் தவிர, குடும்பத்தினர் அனைவர்க்கும் கொரோனா!

அதைத் தொடர்ந்து சமீஷா, வியான்-ராஜ், என் அம்மா, கடைசியாக, ராஜ். அவர்கள் அனைவரும் உரிய வழிகாட்டுதல்களின்படி வீட்டிலுள்ள தங்கள் அறைகளில் தனிமையில் இருந்து மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி வருகின்றனர். எங்கள் வீட்டு ஊழியர்களில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடவுளின் கிருபையால், அனைவரும் தற்போது மீண்டு வருகின்றனர்.

எனக்கு கொரோனா இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்தது. நெறிமுறையின்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டுள்ளன, மேலும் பி.எம்.சி மற்றும் அதிகாரிகளின் உடனடி உதவி மற்றும் பதிலுக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம். உங்கள் எல்லா அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் தயவுசெய்து முகமூடி அணிந்து பாதுகாப்பாக இருங்கள்.மன வலிமையுடன் இருங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story