தனது அழகிய குடும்பத்துடன் ராம்ஜான் கொண்டாடிய நடிகை குஷ்பூ.. வைரலாகும் புகைப்படங்கள்!…

தனது அழகிய குடும்பத்துடன் ராம்ஜான் கொண்டாடிய  நடிகை குஷ்பூ.. வைரலாகும் புகைப்படங்கள்!…

ராம்ஜானையொட்டி நடிகை குஷ்பூ தனது குடும்பத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பூர்வீகமாக கொண்ட நடிகை குஷ்பூ, குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் நுழைந்தார். அதன்பிறகு 1989ம் ஆண்டு வெளியான ‘வருஷம் 16’ படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்‌. பின்னர் பிரபு நடிப்பில் வெளியான ‘சின்னத்தம்பி’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக மாறினார்.

தனது அழகிய குடும்பத்துடன் ராம்ஜான் கொண்டாடிய  நடிகை குஷ்பூ.. வைரலாகும் புகைப்படங்கள்!…

ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக மாறிய குஷ்பூ, 1995ல் சுந்தர்.சி இயக்கிய முறைமாமன் படத்தில் நடித்தார். அப்போது சுந்தர்.சிக்கும் குஷ்பூவுக்கு இடையே காதல் மலந்தது. 5வருடம் காதலித்த அவர்கள் 2000வது ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

தனது அழகிய குடும்பத்துடன் ராம்ஜான் கொண்டாடிய  நடிகை குஷ்பூ.. வைரலாகும் புகைப்படங்கள்!…

சுந்தர்.சி-குஷ்பூ தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இருமகள்கள் உள்ளனர். நடிகையாக இருக்கும் குஷ்பூ தயாரிப்பாளராக இருந்து வருகிறார். அதேபோன்று சின்னத்திரையில் தோன்றி கொஞ்ச நாட்கள் மக்களை மகிழ்வித்தார். அரசியல் இருந்து வரும் குஷ்பூ சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

தனது அழகிய குடும்பத்துடன் ராம்ஜான் கொண்டாடிய  நடிகை குஷ்பூ.. வைரலாகும் புகைப்படங்கள்!…

தற்போது சினிமாவில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் குஷ்பூ, ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடிகை குஷ்பூவும் தனது குடும்பத்துடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார். அப்போது தனது கணவர் சுந்தர்.சி மற்றும் மகள்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share this story