‘தளபதி 65’ படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே… வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘தளபதி 65’ படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே… வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி 65 படத்திலிருந்து முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் தனது 65-வது படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். விஜயின் 65-வது படமான இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

‘தளபதி 65’ படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே… வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!

நெல்சன் திலீப்குமாரின் திறமையைப் பார்த்த அனிருத் தான் அவரை தளபதி 65 படத்திற்காக விஜயிடம் பரிந்துரை செய்துள்ளார்.

விஜய் இந்தப் படத்தில் ரா(Raw) ஏஜெண்டாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக இணைந்துள்ளதால் படத்தில் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் இருக்கிறார் என்று பல மாதங்களுக்கு முன்னரே பல செய்திகள் வெளியாகிவிட்டன. தற்போது இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

‘தளபதி 65’ படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே… வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!

ரஷ்யாவில் இந்தப் படத்தின் படப்பிடப்பு துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this story