டாக்டர் படத்தின் புதிய அப்டேட்.. – உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்…

டாக்டர் படத்தின் புதிய அப்டேட்.. – உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்…

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹீரோ படத்தைத் தொடர்ந்து  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும்  டாக்டர். கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும், இந்தப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.  மேலும் இந்தப்படத்தில் வினய், கலையரசன் மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
டாக்டர் படத்தின் புதிய அப்டேட்.. – உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்…
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, அனிரூத் இசையமைக்கிறார். இது மெடிக்கல் திரில்லர் படம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.. ஆனால் டாக்டர் ஒரு வேடிக்கை நிரம்பிய படம் என்று இயக்குநர் நெல்சன் தெரிவித்திருந்தார். இந்தப்படத்தை கிறிஸ்துமஸுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் மீதமுள்ள படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டாக்டர் படத்தின் புதிய அப்டேட்.. – உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்…
டாக்டர் படத்தின் புதிய அப்டேட்.. – உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்…
சமீபத்தில் இந்த படத்தின் வொர்க்கிங் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின்  எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸின்  அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
 

Share this story