கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

‘குக் வித் கோமாளி’ பிரபலம் நடிகை பவித்ர லட்சுமி கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

கொரானாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊடரங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கொரானாவிலிருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செய்து வருகிறது தமிழக அரசு. கோவி ஷீல்டு, கோவாக்சின் என இரு வகையான தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை உணர்ந்து வகையில் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது.

கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

இதற்கிடையே சினிமா துறையை சார்ந்த பிரபலங்கள் கொரானா தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி போடும் தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே நடிகர் ரஜினி, அருண் விஜய், ஜீவா, சாக்ஷி அகர்வால், காஜல் அகர்வால், சிம்ரன், நயன்தாரா, விக்னேஷ் சிவன், நட்ராஜ் உள்ளிட்டோர் கொரானா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை பவித்ர லட்சுமி, இன்று தனது முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தான் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.

Share this story