குதிரையில் கம்பீரமாய் ‘கர்ணன்’.. வெறித்தனமாய் வெளியான டீசர்…

குதிரையில் கம்பீரமாய் ‘கர்ணன்’.. வெறித்தனமாய் வெளியான டீசர்…

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.

குதிரையில் கம்பீரமாய் ‘கர்ணன்’.. வெறித்தனமாய் வெளியான டீசர்…

தனுஷின் நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவரவிருக்கிற திரைப்படம் ‘கர்ணன்’. இந்த படத்தை ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். இதில் கௌரி கிஷன், லால், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குதிரையில் கம்பீரமாய் ‘கர்ணன்’.. வெறித்தனமாய் வெளியான டீசர்…

சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. இதில் ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து வரும் ஏப்ரல் 9ம் தேதி இப்படம் திரையரங்களில் வெளியாக உள்ளது.

குதிரையில் கம்பீரமாய் ‘கர்ணன்’.. வெறித்தனமாய் வெளியான டீசர்…

இந்நிலையில் கர்ணன் படத்தின் டீசரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டுள்ளார். கர்ணனின் புறப்பாடு என தொடங்கும் இந்த டீசரில், வாளை தூக்கிக்கொண்டு குதிரையில் வருகிறார். ஒரு கிராமமே கர்ணனனை எதிர்பார்க்க கம்பீரமாக குதிரை அமர்ந்து வந்து நிற்கிறார். இறுதியாக “கர்ணா. கர்ணா.. நான் காட்டுப்பேச்சி பேசுறன், ஒருதனையும் விடாது… அடிச்சி தொரத்து…” எனும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அட்டகாசமான உருவாகியுள்ள இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. டீசர் ரசிகர்களை அசர வைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

Share this story