சந்தானம் பட ட்ரைலரின் புதிய சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்!

சந்தானம் பட ட்ரைலரின் புதிய சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் ட்ரைலர் 15 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது முன்னணிக் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் சந்தானம். அவரின் படங்களுக்கு தற்போது பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சந்தானம் பட ட்ரைலரின் புதிய சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்!

சந்தானம் நடிப்பில் கடைசியாக டிக்கிலோனா திரைப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் யோகி என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, நிழல்கள் ரவி, உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். நடித்திருக்கிறார்கள். 

சந்தானம் பட ட்ரைலரின் புதிய சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்!

தற்போது டிக்கிலோனா படத்தின் ட்ரைலர் 15 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதை சந்தானம் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளதை அடுத்து ட்விட்டரில் #Dikkilona என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Share this story