‘மண்டேலா’ படம் பார்த்து மிரண்டுவிட்டேன்… யோகிபாபுவை புகழ்ந்த பிரபல ஐபிஎல் வீரர்…

‘மண்டேலா’ படம் பார்த்து மிரண்டுவிட்டேன்… யோகிபாபுவை புகழ்ந்த பிரபல ஐபிஎல் வீரர்…

‘மண்டேலா’ படத்தில் நடிகர் யோகிபாபுவின் நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டேன் என்று பிரபல ஐபிஎல் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘மண்டேலா’ படம் பார்த்து மிரண்டுவிட்டேன்… யோகிபாபுவை புகழ்ந்த பிரபல ஐபிஎல் வீரர்…

‘மண்டேலா’… படத்தின் பெயரே வித்தியாசாக இருக்கிறதே, அந்த படம் வெளியானால் வித்தியாசமாக இருக்குமா என பலபேரிடம் இந்த கேள்வி இருந்தது. ஆனால் எல்லாவற்றை முறியடித்து மாபெரும் வெற்றிப்படமாக மாறியிருக்கிறது இந்த படம். யோகிபாபு அசத்தலான நடிப்பில் அரசியல் நைய்யாண்டியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அறிமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்பெற்றுள்ளது.

‘மண்டேலா’ படம் பார்த்து மிரண்டுவிட்டேன்… யோகிபாபுவை புகழ்ந்த பிரபல ஐபிஎல் வீரர்…

காமெடியில் கலக்கியுள்ள இப்படத்தில் யோகிபாபுக்கு ஜோடியாக நடித்திருந்த ஷீலா ராஜ்குமாரின் நடிப்பு பாராட்டத்தக்கது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்த இப்படத்தில் சங்கிலி முருகன், ஜீ எம் குமார், கண்ணன் ரவி ஆகியோர் நடித்திருந்தனர். சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த ஏப்ரல் 4-ம் தேதி விஜய் டிவியில் வெளியான இப்படத்திற்கு ஏகப்போக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி யோகிபாபுக்கு வீடியோ கால் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘மண்டேலா’ படத்தை சில நாட்களுக்கு முன் நெட்ஃபிளிக்ஸில் பார்த்ததாகவும், நடிகர்கள் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் என்று கூறினார். முக்கியமாக யோகி பாபுவின் நடிப்பு பாராட்டத்தக்கது. அதேபோன்று இந்த படத்தின் கதை மிகவும் சிறப்பாக இருந்தது. யோகிபாபு, கிரிக்கெட் வீரர் நடராஜனின் நண்பர் என்பது தெரிய வந்ததால், உடனே வீடியோ கால் மூலமாக பேசினார் என கூறினார்.

Share this story