“எல்லோர் மனதையும் உலுக்காமல் விடமாட்டான்”… கர்ணன் டீசரை புகழ்ந்த இயக்குனர்…

“எல்லோர் மனதையும் உலுக்காமல் விடமாட்டான்”… கர்ணன் டீசரை புகழ்ந்த இயக்குனர்…

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீசரை புகழ்ந்து இயக்குனர் சுப்ரமணியம் சிவா ட்விட் செய்துள்ளார்.

தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும்‌ இப்படத்தில் ஹீரோயினாக நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கௌரி கிஷன், லால், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“எல்லோர் மனதையும் உலுக்காமல் விடமாட்டான்”… கர்ணன் டீசரை புகழ்ந்த இயக்குனர்…

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோன்று கர்ணன் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியாகியுள்ளது. அதில் ‘கண்டா வரசொல்லுங்க’ பாடல் வெளியாகி ரசிகர்களின் ‌பேதரவை பெற்றுள்ளது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் டீசரை புகழ்ந்து இயக்குனர் சுப்ரமணியம் சிவா கருத்து ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தம்பி மாரி… #KarnanTeaser பார்த்தேன்… வேற லெவலா இல்ல… இதுக்கு பேரே வேற வைக்கனும்… ப்பா.. உன் #கர்ணன்… எல்லோர் மனதையும் உலுக்காமல் விடமாட்டான்… உன் குழு மொத்தத்திற்கும் மிக பெரிய வெற்றிகான சத்தத்தின் வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story