2வது திருமணத்தை மறைத்த அமலா பால் ?... வெளியான ஆதாரங்களால் சர்ச்சை !
தனது 2வது இரண்டாவது திருமணத்தை நடிகை அமலா பால் மறைத்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால், குறுகிய பல முன்னணி ஹீரோக்களோடு ஜோடிப்போட்டு நடித்துள்ளார். அதன்பிறகு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் ஒன்றாக இருந்த அவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு பிரிந்தனர்.
இதையடுத்து சுதந்திர சுற்றி வந்த அமலா பால், ஜெய்ப்பூரை சேர்ந்த பவீந்தர் சிங்குடன் காதல் வயப்பட்டார். இதைத்தொடர்ந்து பவீந்தர் சிங்கை ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பவீந்தர் சிங், பணமோசடியில் ஈடுபட்டதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த புகாரின் அடிப்படையில் பவீந்தர் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பவீந்தர் சிங் மற்றும் அமலா பால் திருமண சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதோடு திருமண தேதி மற்றும் இதர விபரங்களை பவீந்தர் சிங் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதனால் உண்மைகளை மறைத்து பொய் குற்றச்சாட்டை அமலா பால் கொடுத்துள்ளார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.