திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா .. என்னாச்சு தெரியுமா ?

நடிகை நயன்தாரா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, இந்தி பலமொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இதுவரை பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக பிசியாக இருந்த நயன்தாரா, தற்போது சென்னையில் இருக்கிறார்.
இந்நிலையில் தொடர் வாந்தி காரணமாக தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு சில மணி நேர சிகிச்சைக்கு பிறகு வீடு திருப்பியதாகவும் கூறப்படுகிறது. தீயாய் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு காரணம் நயன்தாரா வீட்டில் ஏதேனும் விசேஷம் இருக்குமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனென்றால் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் நயன்தாரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றது உண்மைதான் என்றும், அது தோலில் ஏற்பட்ட அலர்ஜிக்காக என்றும் மற்றொரு தகவல்கள் வெளியாகியுள்ளது.