ரஜினிக்காக படத்தில் சில மாற்றங்கள்.. ‘அண்ணாத்த’ புதிய அப்டேட்

ரஜினிக்காக படத்தில் சில மாற்றங்கள்.. ‘அண்ணாத்த’ புதிய அப்டேட்

‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடிக்க சில மாற்றங்களை செய்ய இயக்குனர் சிவா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிக்காக படத்தில் சில மாற்றங்கள்.. ‘அண்ணாத்த’ புதிய அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினி – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். கடந்த மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி நடிக்கவேண்டிய முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

ரஜினிக்காக படத்தில் சில மாற்றங்கள்.. ‘அண்ணாத்த’ புதிய அப்டேட்

இந்த படத்தின் ஷூட்டிங்கில் ரஜினியுடன் இணைந்து நயன்தாராவுக்கு நடித்து வருகிறார். கொரானா தொற்று அதிகரித்து வருவதால் ஷூட்டிங்கை மிகவும் பாதுகாப்பாக நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். பிபி கிட் அணிந்துகொண்டுதான் தொழில்நுட்ப கலைஞர்கள் ஷூட்டிங்கில் கலந்துக்கொள்கின்றனர். ரஜினியிடம் பேச யாருக்கும் அனுமதியில்லையாம். இதோடு 5 அடி இடைவெளியில்தான் ரஜினியுடன் இயக்குனர் சிவாவும் பேசி வருகிறார்.

ரஜினிக்காக படத்தில் சில மாற்றங்கள்.. ‘அண்ணாத்த’ புதிய அப்டேட்

இந்நிலையில் கொரானா அதி தீவிரமாக பரவி வருவதால் தேவையில்லாத ரிஸ்க் எடுக்கவேண்டாம் என இயக்குனர் சிவா நினைக்கிறாராம். அதனால் ‘அண்ணாத்த’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை படமாக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம் தற்போதைக்கு ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகளை மட்டும்‌ படமாக்கிவிட்டு மே 10ஆம் தேதிக்குள் ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

Share this story