விறுவிறுப்பாகும் ‘கொற்றவை’ படத்தின் பணிகள்… புதிய அப்டேட்…

விறுவிறுப்பாகும் ‘கொற்றவை’ படத்தின் பணிகள்… புதிய அப்டேட்…

சி.வி.குமாரின் ‘கொற்றவை’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விறுவிறுப்பாகும் ‘கொற்றவை’ படத்தின் பணிகள்… புதிய அப்டேட்…

பீட்சா, சூது கவ்வும், தெகிடி, அட்டகத்தி, இன்று நேற்று நாளை போன்ற பல படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் தற்போது 4ஜி, டைட்டானிக், காதலும் கவுந்து போகும் ஆகிய மூன்று படங்களை தயாரித்து வருகிறார். தயாரிப்பாளராக உள்ள சி.வி.குமார் இயக்குனராக களமிளங்கி சில படங்களை இயக்கியுள்ளார். அதில் மாயவன், கேங்ஸ் ஆப் மெட்ராஸ் போன்ற படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றுள்ளன.

விறுவிறுப்பாகும் ‘கொற்றவை’ படத்தின் பணிகள்… புதிய அப்டேட்…

இதைத்தொடர்ந்து மூன்றாவதாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். ‘கொற்றவை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் பேண்டசி படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராஜேஷ் கனகசபை, சந்தனா ராஜ், சுபிக்ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகிறது. புதையல் வேட்டையை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

விறுவிறுப்பாகும் ‘கொற்றவை’ படத்தின் பணிகள்… புதிய அப்டேட்…

இந்த படத்தின் முதல் பாகத்திற்கான ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து டப்பிங் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்ட் பிரொக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவு பெற்றாலும், கொரானா தொற்று குறைந்தவுடன் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்து புதிய அப்டேட்டுகள் வெளியாகும் என தெரிகிறது.

Share this story