யாஷிகாவுடன் காதலா ?... நடிகர் ரிச்சர்ட் ரிஷி விளக்கம் !
நடிகை யாஷிகாவை காதலிப்பதாக வந்த தகவலுக்கு நடிகர் ரிச்சர்ட் ரிஷி விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருப்பவர் ரிச்சர்ட் ரிஷி. தமிழில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் தான் ரிச்சர்ட் ரிஷி.
இந்நிலையில் அஜித்தின் மைத்துனர் நடிகர் ரிச்சர்ட் ரிஷி, நடிகை யாஷிகா காதலிப்பதாக தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை நிரூபிக்கும் விதமாக தற்போது ரிச்சர்ட் ரிஷியுடன் யாஷிகா நெருக்கமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகை யாஷிகாவை ரிச்சர்ட் ரிஷி காதலிப்பதாக வந்த தகவல் வதந்தியே. பிரபல கன்னட இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அதை பார்த்து தான் யாஷிகாவை ரிச்சர்ட் ரிஷி காதலிப்பதாக தகவல் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.