‘வேலன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு. பிரபு என்ன கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா ?

‘வேலன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு. பிரபு என்ன கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா ?

முகேன் நடிக்கும் ‘வேலன்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘வேலன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு. பிரபு என்ன கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா ?

யூட்யூப்பில் வெளியாகி டிரெண்டான ஏராளமான ஆல்பம் பாடல்களை பாடியவர் முகேன் ராவ். இந்த அறிமுகமத்தை வைத்து ‘பிக்பாஸ் சீசன் 3’-யில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். சக போட்டியாளர்களுடன் கலகலவென பழகும் சுபாவத்தால் ரசிகர்களை கவர்ந்த இவர், பிக்பாஸ் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை அடுத்து ‘வெற்றி’ என்ற புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து முடித்துள்ளார். ‘வெப்பம்’ படத்தின் இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கியுள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

‘வேலன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு. பிரபு என்ன கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா ?

இதையடுத்து தனது இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார் முகேன் ராவ். ‘வேலன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கவின் மூர்த்தி இயக்கி வருகிறார். முகேனுக்கு ஜோடியாக ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்த மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்த படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘வேலன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு. பிரபு என்ன கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா ?

ஸ்கைன் மேன் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ‘வேலன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் பொள்ளாச்சியிலிருந்து ‘தில்லையார் பழனிசாமி’ என்று நடிகர் பிரபுவின் கேரக்டரை படக்குழுவினர் அறிமுகம் செய்துள்ளனர். நடிகர் பிரபு இந்த படத்தில் முகேன் ராவ்வுக்கு அப்பாவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story