இணையத்தைக் கலக்கும் 'குட்டி தல'... அஜித் தன் மகன் உடன் இருக்கும் வைரல் புகைப்படம்!

நடிகர் அஜித் தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'வலிமை' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள அஜித் அதையடுத்து நாடு முழுவதும் பைக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது வெளியான அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் வைரலாகின.
இந்நிலையில் தற்போது அஜித் தனது மகன் ஆத்விக் உடன் காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் ஆத்விக் தலையில் ஹெல்மெட் மாட்டி மிகவும் அழகாக காணப்படுகிறார். அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் அரிதாகவே வெளியாகும். எனவே தற்போது வெளியாகி உள்ள புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் ட்விட்டரில் 'KuttyThala' என்ற ஹாஷ்டாக் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
'வலிமை' படத்தை அடுத்து அஜித் மீண்டும் இயக்குனர் எச் வினோத் உடன் கூட்டணி அமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.