அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்… இயக்குனர் யார் தெரியுமா!?

அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்… இயக்குனர் யார் தெரியுமா!?

அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரபல தயாரிப்பாளர் இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

மலையாளத்தில் மறைந்த இயக்குனர் சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் வெளியாகிய ‘அய்யப்பனும் கோஷியும்‘ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்… இயக்குனர் யார் தெரியுமா!?

அதையடுத்து இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியிருந்தார். முதலில் நடிகர் பார்த்திபன் மற்றும் சசிகுமார் இந்த ரீமேக்கில் நடிப்பதாகக் கூறப்பட்டது.

பின்னர் பார்த்திபன் தான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்தார். தற்போது இந்தப் படத்தில் சரத்குமாரும், சசிகுமாரும் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்… இயக்குனர் யார் தெரியுமா!?

இந்தத் தமிழ் ரீமேக்கை யார் இயக்கப்போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது இந்தப் படத்தை தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசனே இயக்கவுள்ளாராம்.

இவர் ஏற்கனவே ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘ருத்ரன்’ படத்தை தயாரித்து இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this story